பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா எழுதிய கடிதம்! கலக்கத்தில் அதிமுக-வினர்

Report Print Basu in இந்தியா
4454Shares

பெங்களூர் சிறையிலிருக்கும் சசிகலா வழக்கறிஞர் தனது விடுதலை குறித்து ராஜா செந்தூர் பாண்டியனுக்கு கடிதம் எழுதியுள்ளது அதிமுக-வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் நலமாக இருக்கிறோம். கொரோனா காரணமாக தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையளிக்கிறது என சசிகலா கடிதத்தில் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக 2020 மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து, ‘நேர் காணல்’களை கர்நாடக சிறைத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர் காணல் அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

சிறைத்துறை எனது நன்னடத்தை தண்டனை குறைப்பு விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.உத்தரவு கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன்.

அதன்படி அபராதத்தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும். கர்நாடக நீதிமன்றத்தில் அபராதத்தொகையை கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் 2017 தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக தீர்ப்பு நகலில் திருத்தங்கள் தொடர்பான மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வக்கீல்களிடம் உறுதி செய்யவும்.

அதுபற்றி டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்