தந்தை, ஆண் நண்பர் மூலம் உருவான கருவை சாலையில் வீசியெறிந்த 17 வயது சிறுமி! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Report Print Gokulan Gokulan in இந்தியா
2097Shares

கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காலகட்டங்களில் இந்தியாவில் பாலியில் வன்கொடுமை வழக்குகள் வெகுவாக அதிகரித்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் மூலமாக உருவான கருவை சாலையில் வீசியெறிந்துள்ள சம்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் வசிந்த் நகரில் சாலையோரத்தில் இறந்த கருவை காவல்துறையினர் சமீபத்தில் கண்டெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து விசாரணையை தீவிரமாக்கிய காவல்துறையினர் கருவானது 17 வயது சிறுமியினுடையது என கண்டறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை விசாரித்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

51 வயதான பள்ளி ஆசிரியரான தனது தந்தை மற்றும் 21 வயது ஆண் நண்பர் என இருவரும் தொடர்ந்து தன்னை பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், அதன் மூலம் கரு உருவான கருவை வீதியில் வீசியெறிந்துள்ளனர் என்றும் சிறுமி காவல்துறையின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிறுமியின் குடும்பம் நாவி மும்பை பகுதியில் வந்ததாகவும் அப்போது 21 வயது வாலிபனுடன் பழகியிருந்ததாகவும், இந்த பழக்கமானது வசிந்த் நகருக்கு புலம் பெயர்ந்தபோதும் தொடர்ந்துள்ளதாக விசாரணையில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிறுமியின் வாக்குமூலத்தினை தொடர்ந்து அவரின் தந்தை மற்றும் ஆண் நண்பர் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்