80 டிகிரி செங்குத்தான மலை படிக்கட்டுகளில் அசால்டாக ஏறிய 68 வயது பாட்டி! அசத்தல் காணொளி

Report Print Gokulan Gokulan in இந்தியா

கொரோனா தொற்றைக் கண்டு உலக நாடுகளே பீதியில் உறைந்து போயிருக்கையில் வட இந்தியாவில் 68 வயதான பாட்டி ஒருவர் 80 டிகிரி செங்குத்தான மலையில் ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள ஹரிஹர் கோட்டையானது மிகவும் செங்குத்தான பகுதியாகும். மலையேற்றத்தினை தொழிலாக கொண்டிருக்கக்கூடியவர்கள் கூட இந்த மலையேற்றத்தில் சில இடங்களில் தடுமாறுவார்கள்.

இப்படியான மலை மீது 68 வயதான மூதாட்டி ஒருவர் ஏறி உச்சியை தொட்டிருப்பது பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டரில் பிரபலமான ஒரு காணொளியில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

80 டிகிரி கோணத்தில் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள படிகட்டுகளில் பாட்டி சிரித்தபடி சிரமமில்லாமல் ஏறி வருகிறார். இந்த மலை ஏற்றத்திற்கு பாட்டி எவ்வித பிரத்தேகமான உடைகளையும் அணிந்திருக்கவில்லை. படிகளின் இருபுறங்களிலும் உள்ள பிடிப்புகளை பிடித்தபடி பாட்டி அசால்டாக உச்சிக்கு வந்து சேருகிறார்.

இதனை கண்ட இதர சுற்றுலா பயணிகள் பாட்டியை உற்சாகப்படுத்துகின்றனர். உச்சியை அடைந்ததும் பாட்டிக்கு கை தட்டியும், விசில் அடித்தும் பெரும் வரவேற்பு வழங்கப்படுகிறது.

இந்த காணொளியை மகாராஷ்டிரா தகவல் மையத்தின் துணை இயக்குநர் தயானந்த் காம்ப்ளே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்