தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள மாதாப்பூர் பகுதியில், சொகுசு கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 3:30 மணியளவில் அதிவேகமாக வந்த பெர்ராரி சொகுசு கார் யேசு பாபு (50) என்கிற கட்டிட காவலாளி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை தொடர்ந்து மாதாப்பூர் காவல்துறையினர் சொகுசு காரை ஓட்டிவந்த நவீன் குமார்(29) என்கிற இளைஞரை கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து, உயிரிழந்த யேசு பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.