மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் மரணமடைந்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சியை நிறுவி அதன் தலைவராக இருந்தார் ராம்விலாஸ் பஸ்வான். மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருந்த இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

ஒரு மாத காலமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த பஸ்வானுக்கு தற்போது 74 வயதாகிறது. இவர் 8 முறை மக்களவை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். கடைசியாக மாநிலங்களவைக்கு தெரிவு செய்யப்பட்டு அமைச்சராக இருந்தார்.

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்