அரசுடமை ஆக்கப்பட்ட போயஸ் கார்டன் வீடு! சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர் சசிகலா எங்கு தங்குவார்?

Report Print Raju Raju in இந்தியா

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா விடுதலைக்கு பின்னர் தஞ்சாவூரில் சிறிது காலம் ஓய்வெடுக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தனது சித்தி சசிகலாவை விடுதலை செய்ய வைப்பதற்கான பணிகளை மும்முரமாக கவனித்து வருகிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ஜனவரியில் சசிகலா விடுதலையாவார் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே சசிகலா விடுதலைக்கு பிறகு எங்கு தங்குவார் என பலரால் கேட்கப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை சசிகலா தரப்புக்கு தற்போது நிலவரம் சரியில்லாத நிலையிலேயே இருக்கிறது. வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சொத்துக்களை முடக்கி வருவதால், சிறைவாசத்துக்கு பிறகு தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா சில வாரங்கள் ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகிய பிறகு மீண்டும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் தங்கமுடியாத வகையில், அண்மையில் அது அரசுடமை ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்