முன்னாள் மத்திய புலனாய்வு பிரவு இயக்குநரும், மணிப்பூர் நாகாலாந்தின் முன்னாள் ஆளுநருமான அஸ்வானி குமாரின் உடல் நேற்று இரவு தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமார் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என சிம்லா பொலிஸ் சூப்பிரண்டு மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து தற்கொலைக்கான குறிப்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் மேலதிக தகவல்களை ஏதும் தெரிவிக்க முடியாது என டிஜிபி சஞ்சய் குண்டு கூறியுள்ளார்.
கடந்த 37 ஆண்டுகளில் இவர் இம்மாச்சல் பிரதேச ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், டிஜிபியாகவும், இரண்டாண்டு காலம் மத்திய புலனாய்வு பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு குறித்த விசாரணையில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
குமார் 2013 மற்றும் 2014 க்கு இடையில் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.