37 வயதில் திருமணம் செய்து கொண்ட பெண்! திருமணமான 15 நாளில் நடந்த துயர சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
622Shares

தமிழகத்தில் திருமணமான 15 நாளில் வீட்டில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் செல்லப்பன் (54). இவருக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுலோச்சனா(37) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகரம் தென் கிராமத்தில் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுலோச்சனாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவரை, மருத்துவமனைக்கு போகலாம் என செல்லப்பன் அழைத்தும், அவர் மறுத்ததாகவும் பின்னர் வீட்டில் தூங்கிய சுலோச்சனா, நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி செல்லப்பன் அளித்த புகாரின்பேரில் பொலிசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான 15 நாளில் புதுப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் இரு குடும்பத்தினரையும் பலத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்