ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமியின் வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்! குவியும் எதிர்ப்பு

Report Print Basu in இந்தியா
2878Shares

ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி மரணமடைந்த சிறுமியின் வீடியோவை பாஜக-வின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் பகிர்ந்தது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஹத்ராஸ் சம்பவம் குறித்து எஸ்ஐடி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கையாண்டது தொடர்பாக ஹத்ராஸ் எஸ்.பி. விக்ராந்த் வீர் மற்றும் நான்கு பொலிஸ் அதிகாரிகளை உத்தரபிரதேச அரசு வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி AMU-க்கு வெளியே தரையில் படுத்து கிடந்த படி நிருபருடன் பேசும் வீடியோவை பாஜக-வின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஹாத்ராஸ் பாதிக்கப்பட்ட சிறுமி AMU-க்கு வெளியே ஒரு நிருபருடன் பேசினார், சிறுமி அவரது கழுத்தை நெரித்ததாக கூறினார்.

குற்றத்தின் கொடூரத்திலிருந்து விலக்க எதுவுமில்லை, ஆனால் அதற்கு வேறு சாயம் பூசுவது மற்றும் கொடூரமான குற்றத்தை மற்றொருவருக்கு எதிராக திசை திருப்புவது நியாயமற்றது என்று மால்வியா வீடியோவுடன் ட்விட் செய்துள்ளார்.

அமித் மால்வியாவின் செயலை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது, வீடியோவைப் பகிர்ந்ததற்காக மால்வியாவை பகிரங்கமாக சாடியுள்ளது.

மலிவான, வெட்கமில்லாத மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட நபர் மட்டுமே பாஜக-வின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருக்க முடியும், அமித் மால்வியா அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராதிகா கெரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாஜக தொழில்நுட்பக் குழுவை சிறையில் அடைக்க ஊடகங்கள் ஒரு பிரச்சாரத்தை நடத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்