கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் 1 லட்சம் பேர் பலி!!

Report Print Gokulan Gokulan in இந்தியா
77Shares

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கையானது 1 லட்சத்தினை கடந்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.50 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் ஏறத்தாழ 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 64,73,545 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 54,27,707 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 9,44,996 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,00,842 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 79,476 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,069 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனையை பொறுத்த அளவில், இதுவரை நாடு முழுவதும் 7,78,50,403 மாதிரிகளும், கடந்த 24 மணி நேரத்தில், 11,32,675 மாதிரிகளையும் பரிசோதித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகளை பொறுத்த அளிவில் இந்தியா 1.5 சதவிகிதம் என்கிற எண்ணிக்கையுடன் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நாட்டில் அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 14,16,513 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்த தமிழ்நாடு 6 லட்சம் கொரோனா பாதிப்புகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்