சித்தியை காதலித்தது பிடிக்கவில்லை! வெட்டி கொன்றோம்: அக்கா மகன்கள் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா
1046Shares

தமிழகத்தில் சித்தியை காதலித்தது பிடிக்காமல் அக்கா மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து மது ஊற்றி இளைஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நித்யா என்பவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரின் காதலுக்கும் நித்யாவின் குடும்பத்தினர் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, நித்யா சுரேஷ்குமாருடன் பழகிவந்துள்ளார்.

நித்யாவின் அக்கா மகனான குபி மட்டும் சுரேஷ் குமாருடன் இணக்கமாக நட்பு பாராட்டி பழகி வந்துள்ளான். சுரேஷ் குமாரும் தன் காதலுக்கு குபி உதவுவான் என்று நம்பிக்கையில் அவருடன் பழகிவந்துள்ளார்.

இந்த நிலையில், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு குபி, சுரேஷ் குமாரை அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து சுரேஷ் குமார் தனது தாயாரிடம் சொல்லிவிட்டு, 500 ரூபாய் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.

சுரேஷ்குமாரின் சக நண்பர்களான குபி, குபியின் அண்ணன் ஷ்யாம் உள்ளிட்ட ஐந்து பேர் நெல்லிக்குப்பம் - அகரம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதிக்குச் சென்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.

பிறகு அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சுரேஷ் போதையில் இருந்த போது, குபி, ஷ்யாம் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ் குமாரைக் கொடூரமாக தாக்கி வெட்டி கொலை செய்தனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் சுரேஷ் குமார் அந்த இடத்திலே துடி துடித்து இறந்தார்.

இதையடுத்து, சுரேஷ் குமாரின் தாயார் விஜயா கொடுத்த புகாரின் பேரில் திருப்போரூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். இந்த விசாரணையில், சித்தியைக் காதலிப்பது பிடிக்காமல் சுரேஷ் குமாரை வெட்டிக்கொன்றதாக நித்யாவின் அக்கா மகன்கள் குப்பியும், ஷாமும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்