கடலைப்பருப்பை சாப்பிட்ட 18 மாத குழந்தை பரிதாப மரணம்! பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்தி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் 18 மாத குழந்தை கடலைப் பருப்பை திண்ற போது, தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழிலாளியான இவருக்கு தர்ஷனா என்று 18 மாத பெண் குழந்தை இருந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை தர்ஷனா வீட்டில் இருந்த கடலைப்பருப்பை சாப்பிட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்தவிதமாக கடலைப் பருப்பு தர்ஷனாவின் தொண்டையில் சிக்கியதால், மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த தர்ஷனாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் இருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்து வந்த தர்ஷனா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார். இதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்க வேண்டும்? கொடுக்க கூடாது, என்பதை அறிந்திருக்க வேண்டும்,

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்