அச்செய்தியைக் கேள்வியுற்ற நொடி முதல் அடைந்த வேதனையிலிருந்து மீள முடியாது தவித்து வருகிறேன்! கொந்தளித்த சீமான்

Report Print Basu in இந்தியா

உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். அச்செய்தியைக் கேள்வியுற்ற நொடி முதல் அடைந்த வேதனையிலிருந்து மீள முடியாது தவித்து வருகிறேன்.

கற்பனைக்குக்கூட எட்டாத பாலியல் பெருங்கொடுமையும், அதீத வன்முறையும் அந்த ஏழைப்பெண் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினரை இறுதிமரியாதையை கூட செலுத்தவிடாமல், உத்திரப்பிரதேச மாநில அரசு அவசர அவசரமாக அப்பெண்ணின் உடலுக்கு எரியூட்டியது ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதம்.

இந்நாட்டின் குடிமகனாகப் பிறந்து அநீதிக்கு எதிராக எதுவும் செய்யவியலா இக்கையறு நிலை குற்றவுணர்வுக்குள் தள்ளுகிறது. அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஒவ்வொரு குடிமகனும் போர்க்குரல் எழுப்ப வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்