உயிரிழந்த இளம்பெண் அளித்த வாக்குமூலம்: ஹத்ராஸ் கூட்டு துஷ்பிரயோகம் சம்பவம் தொடர்பில் அலிகார் ஐ.ஜி அதிர்ச்சியூட்டும் தகவல்

Report Print Basu in இந்தியா

உத்தர பிரதேசத்தில் நான்கு ஆண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அலிகார் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) பியூஷ் மோர்டியா தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி 19 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அலிகார் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) பியூஷ் மோர்டியா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 14 ம் தேதி, பாதிக்கப்பட்டவரின் சகோதரர் நபர் ஒருவர் தனது சகோதரியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்டவர் இளம்பெண் பின்னர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தனது அறிக்கையில் அந்த நபர் தன்னை துன்புறுத்தியதாகவும், வேறு எந்த குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை என்றும் அலிகார் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) பியூஷ் மோர்டியா கூறினார்.

செப்டம்பர் 22 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட இளம் பெண் மேலும் மூன்று நபர்களை பெயரிட்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மருத்துவ பரிசோதனையில் கற்பழிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஐ.ஜி.அலிகர் கூறியதாக மேற்கோளிட்டு ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்