என் உயிர் பிரிந்தால்... 15 ஆண்டுக்கு முன்பே கடைசி ஆசையை கூறிய எஸ்பிபி

Report Print Arbin Arbin in இந்தியா

பண்ணை வீட்டில்தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என 15 ஆண்டுகளுக்கு முன்பே தனது விருப்பத்தை எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்திருந்ததாக எல்லாபுரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எல்லாபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறுகையில், எஸ்பிபி மறைவுச் செய்தியை கேட்டு தாமரைப்பாக்கம் தொகுதி மக்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் இருக்கிறோம்.

அவர் சமூக அக்கறை கொண்டவர். இந்த பகுதியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகளை செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கியுள்ளார்.

மட்டுமின்றி 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பண்ணை வீட்டில் வந்து வசித்தும் இருக்கிறார்.

இந்த பண்ணை வீட்டில் அவருடைய பாட்டி, அம்மா, மாமியார் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பண்ணை வீட்டில் அவர் இருக்கும் போது, நான் இறந்துவிட்டால் என்னை எனது பண்ணை வீட்டிலேயே அடக்கம் செய்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது விருப்பத்தை கூறியிருக்கிறார்.

தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற இந்த பண்ணை வீட்டில் நாளை எஸ்பிபியின் இறுதிச் சடங்குகளை செய்வதாக சரண் அறிவித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என கூறும் சரவணன்,

சிவன் என்றால் எஸ்பிபிக்கு பிரியம். இந்த பண்ணை வீடும் சிவன் கோயிலுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது.

சிவனுக்காக பல பாடல்களை பாடிய எஸ்பிபி தற்போது சிவனுக்கு அருகே நல்லடக்கம் செய்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியான சம்பவம் என்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்