மகன் முகத்தை கடைசியாக பார்த்துக்கிறேன்! இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் கதறி அழுத தாய்

Report Print Santhan in இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், அவரின் கடைசியான மகனின் முகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய மந்திரிசபையில், ரெயில்வே இணை மந்திரியாக பணியாற்றி வந்தவர் சுரேஷ் அங்கடி.

65 வயது மதிக்கத்தக்க இவர், கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் திகதி சுரேஷ் அங்கடிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர்

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணச் செய்தி கேட்டதும் அவரது தாய் சோமவ்வா கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர்.

நேற்று டெல்லியில் சுரேஷ் அங்கடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வெறும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், சுரேஷ் அங்கடியின் மகள் விமானம் மூலம் மும்பைக்கு சென்று அங்கிருந்து வேறொரு விமானத்தில் டெல்லிக்கு சென்றார்.

அப்போது சுரேஷ் அங்கடியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்கு தானும் வருவதாக, சோமவ் கெஞ்சியுள்ளார், ஆனால் அவருக்கு வயதாகி விட்டதால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், தனது மகனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று கதறி அழுதார். இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வருன்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்