முடிவுக்கு வந்தது ரெய்னாவின் உறவினர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கு: பஞ்சாப் அரசு முக்கிய அறிப்பு

Report Print Basu in இந்தியா

சுரேஷ் ரெய்னாவின் உறவினர் மீது தாக்குதல் நடத்திய மூன்று குற்றவாளிகள் பிடிபட்டுள்ளதாகவும், வழக்கு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்தார்.

பஞ்சாப் அரசின் இந்த அறிவிப்பு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதற்கான தொடக்கமாக அமைந்துள்ளது.

ரெய்னா உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தி இருவரை கொன்ற குற்றவாளிகள் பிடிபட்டுள்ளதாகவும், தாக்குதல் மற்றும் கொலை வழக்கு மாநில காவல்துறையால் தீர்க்கப்பட்டதாகவும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான கொள்ளைக்கார கும்பலைச் சேர்ந்த 3 பேர் பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர், மேலும் தலைமறைவாக உள்ள 11 பேர் இன்னும் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

சுரேஷ் ரெய்னாவின் உறவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விசாரிக்க முதல்வரின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட எஸ்ஐடி குழுவால் பல மாநிலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் செப்டம்பர் 15ம் தேதி பதான்கோட்டில் கைது செய்யப்பட்டனர்.

இன்னும் தலைமறைவாக உள்ள மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய மேலதிக விசாரணை நடந்து வருகிறது என பொலிசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்