அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்: தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் வெட்டூர் பகுதியை சேர்ந்த 60 வயதான ஸ்ரீகுமார், அவரது மனைவி மினி(55) மற்றும் மகள் அனந்தலட்சுமி(26) ஆகியோரே தீயில் கருகி மரணமடைந்தவர்கள்.

அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஸ்ரீகுமாரின் குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக கூறும் அப்பகுதி மக்கள், தொடர்ந்து அந்த குடியிருப்பில் இருந்து கரும்புகை எழுவதைக் கண்டு பொலிசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் அளித்த தகவலின் பேரில் மீட்புக்குழுவினர் சம்பவப்பகுதி விரைந்து வந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், குடியிருப்புக்குள் இருந்து மூன்று சடலங்களை மீட்டுள்ளனர்.

மூவரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றே முதற்கட்ட விசாரணையில் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

கடனில் மூழ்கிய நிலையில், ஸ்ரீகுமார் குடும்பம் கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதன் காரணம் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்