கல்லூரி மாணவியுடன் தலைமறைவான இரண்டு குழந்தைகளின் தந்தை! அவமானத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கணவன், கல்லூரி மாணவியுடன் சென்ற விரக்தியில் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு அபிஷேக், அபிருத் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் முத்து 22 வயது கல்லூரி மாணவி விஜயலட்சுமி கமலி என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த தொடர்பு முத்துவின் மனைவி ராதாவிற்கு தெரிந்து, கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முத்து, விஜயலட்சுமியை கடத்தி சென்றுவிட்டார். இதைஅறிந்த அக்கம்பக்கத்தினர் அசிங்கமாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராதா படுக்கை அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு இரண்டு மகன்கள் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது மூவரின் அலறும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

ஆனால் மூவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிசார் மூன்று பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த முத்துவை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்