பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தையை எரித்த தாய்!.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் பிறந்து 4 நாட்களேயான குழந்தையை பெற்ற தாயே எரித்துக் கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி சங்க திரையரங்க வளாகத்தில் குழந்தையொன்று எரிந்த நிலையில் கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையின் சடலத்தை கைப்பற்றியதுடன் விசாரணையை தொடங்கினர்.

குழந்தையின் சடலத்துக்கு அருகே இரத்தக் கரை படிந்த துணிகளும், இரண்டு புதிய துணிகளும் எரிந்த நிலையில் கிடந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் சங்குபுரம் 6 வது பகுதியை சேர்ந்த 22 வயது கோமதி, கோமதியின் தாயார் இந்திராணி, மற்றும் அவரது தந்தை சண்முகவேல் ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கடைசியில் கோமதியே குழந்தையை பெற்றுவிட்டு, எரித்துக் கொன்றது தெரியவந்தது, தனக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், தவறான பழக்கத்தின் மூலம் பிறந்ததால் குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து கோமதியை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

22 வயதான கோமதிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. தவறான தொடர்பு காரணமாக கர்ப்பமான கோமதி கருவை கலைக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் குழந்தை பிறந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் பச்சிளம் குழந்தையை கொலை செய்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்