நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்

Report Print Basu in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான கல்யாண சுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தனியார் யூ-டியூப் சேனை ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், குற்றச்சாட்டு இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க நாங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.

கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி போன்றவர்களை சொந்த பிள்ளைகள் போன்றுதான் தட்டிக் கொடுத்து வளர்த்தோம்.

இவர்களை போன்ற ஆட்கள் கட்சிக்கு வேலை செய்யாமல், கட்சிக்குள் தனக்கென வேலை செய்கிறார்கள். எவ்வளவு சொல்லியும் அவர்கள் அதனை திருத்திக் கொள்ளவில்லை என்று சீமான் சாடினார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என ராஜீவ் காந்தி ட்விட்டர் வயிலாக தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டதாவது, அது ஒரு பேரின்ப கனாக்காலம். அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்