இட்லி சாப்பிட மறுத்த 5 வயது குழந்தை கொலை: பதறவைத்த சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் இட்லி சாப்பிட மறுத்ததால் 5 வயது பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில் அக்குழந்தையின் பெரியம்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியின் மேல்விழி கிராமத்தை சேர்ந்த ரொசோரியா-ஜெயராணி தம்பதியரின் 5 வயது குழந்தை ரென்சிமேரி.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயராணி இறந்துவிட, தாயை இழந்து தவித்த ரென்சிமேரி அவரது பாட்டி வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்ற மாலை ஜெயராணியின் சகோதரி ஆரோக்கியமேரி, ரென்சிமேரியை உருட்டு கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.

இதில் குழந்தை பலத்த காயமடைய, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இத்தகவல் காட்டுத்தீ போல் பரவ கிராம நிர்வாக அலுவலரிடம் ஊர்மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஆரோக்கியமேரியை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், குழந்தை இட்லி சாப்பிட மறுத்து அடம்பிடித்ததால் அடித்ததாக ஆரோக்கியமேரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் ஆரோக்கியமேரியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்