என்னை வெட்டி இரண்டாக பிளந்தாலே ஒழிய.. நாம் தமிழர் கட்சியை உடைக்க முடியாது: கொந்தளித்த சீமான்

Report Print Basu in இந்தியா

நாம் தமிழர் கட்சிக்குள் நீடித்து வரும் குழப்பங்கள் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவரித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பில் தொடர்ந்து அமைதி காத்து வந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

தனியார் யூ-டியூப் சேனை ஒன்றுக்கு சீமான் அளித்துள்ள பேட்டியில், குற்றச்சாட்டு இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க நாங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.

கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி போன்றவர்களை சொந்த பிள்ளைகள் போன்றுதான் தட்டிக் கொடுத்து வளர்த்தோம்.

கல்யாண சுந்தரம் கட்சியில் 10 ஆண்டுகளாக இருக்கிறார். ஆனால், அவரை போன்ற ஆட்கள் கட்சிக்கு வேலை செய்யாமல், கட்சிக்குள் தனக்கென வேலை செய்கிறார்கள். எவ்வளவு சொல்லியும் அவர்கள் அதனை திருத்திக் கொள்ளவில்லை என்று சீமான் சாடியுள்ளார்.

நான் வேண்டும் என்றால் என்னோடு பயணிக்கலாம். இல்லையென்றால் கல்யாண சுந்தரத்தோடு பயணிக்கலாம்.

கல்யான சுந்தரம் போன்றவர்கள் கட்சியை விட்டு சென்றாலும் கவலையில்லை. பேச்சாளர்களை நம்பி கட்சி இல்லை. கட்சியில் ஆயிரம் பேர் வருவான் போவான் என்றும் விளக்கமளித்துள்ளார்.

என்னை வெட்டி இரண்டாக பிளந்தாலே ஒழிய, கட்சியை உடைக்க முடியாது.

அவர்கள் என் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி செத்தால் கட்சியை கைபற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் செத்தாலும் இவர்கனை போன்றோரை நம்பி கட்சியினர் அவர்களுக்க பின்னால் பயணிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்