வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனுக்கு சாப்பிட உணவு கொடுத்த மனைவி! பின்னர் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவனுக்கு உணவு கொடுத்துவிட்டு மனைவி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் முபீனா (33). இவர் கணவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார்.

இதையடுத்து கொரோனா கட்டுபாடு காரணமாக 14 நாட்கள் ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். முபீனா கணவருக்கு சிற்றுண்டி தயார் செய்து எடுத்து சென்று கொடுத்திருக்கிறார்.

பின்னர் வெளியில் சென்ற முபீனா அதன் பிறகு மாயமானார்.

இதையடுத்து முபீனாவின் கணவர், தனது மனைவியை காணவில்லை என பொலிசில் புகார் கொடுத்தார்.

அதே சமயத்தில் ஷெரீப் (38) என்பவரை காணவில்லை என அவர் மனைவியும் பொலிசில் புகார் கொடுத்தார்.

இது குறித்த பொலிசார் விசாரித்த போது முபீனாவும், ஷெரீப்பும் காதலித்து வந்ததும் பின்னர் ஒன்றாக ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது.

இதை கேட்ட முபீனா கணவரும், ஷெரீப் மனைவியும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தநிலையில் முபீனா மற்றும் ஷெரீப்பை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்