காதலனின் தாயிடம் திருமணத்திற்காக கெஞ்சிய இளம் பெண்! என் மகளுக்கு இது தான் நடந்தது என கதறி அழும் தந்தை

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அந்த பெண்ணின் தந்தை என்னுடைய மகளின் மரணத்திற்கு காதலனின் குடும்பம் தான் காரணம், என் மகளுக்கு நீதி வேண்டும் என்று கண்கலங்கி அழுதுள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ராம்ஸி என்ற 24 வயது பெண், பல்லிமுக்குவை சேர்ந்த ஹரிஷ்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஹரிஷ் அவரை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, கருவை கலைக்க வைத்துவிட்டு, இப்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து, ராம்ஸியை ஏமாற்ற நினைத்துள்ளார்.

இதை அறிந்த ராம்ஸி, ஹரிஷ் மற்றும் அவரின் தயாரிடம் போன் உரையாடலில் எனக்கு நீங்கள் தான் வேண்டும், என்னை தேவைப்படும் போது, பயன்படுத்திவிட்டு, இப்போது இப்படி செய்தால், நான் என்ன செய்வேன் என்று அழுது நீதி கேட்ட ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

ஹரிஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகளை பறி கொடுத்த தந்தை ரஹீம், என் மகள் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார். அவள் இறந்த பின்னரே எனக்கு இது தெரியவந்துள்ளது.

ஹரீஷ் இல்லாமல் வாழ முடியாது என்று அவள் சொன்னதால் நாங்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டோம். எனது மகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்று இருந்தேன், ஆனால் என் மகள் ஹரிஷின் தாயுடன் நடத்திய உரையாடலைக் கேட்ட பிறகுதான் என் பெண் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளானதை நான் உணர்ந்தேன்.

எனது மகளுக்கு நீதி வேண்டும். அவள் அதைப் பெறுவதற்கு நான் எங்கு வேண்டும் என்றாலும் செல்வேன் என் கண் கலங்கிய படி கூறியுள்ளார்.

மேலும், அவர் என் மகளின் திருமணத்தைப் பற்றி பேச நான் அவர்களின் வீட்டிற்கு பலமுறை சென்றிருந்தேன். ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு சாக்குபோக்கு செல்லிவிடுவார்கள்.

நான் இளைய மகள் இருக்கிறாள், அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும். அப்படி என்றால் நான் என்னுடைய மூத்த மகளான ராம்ஸிக்கு திருமணம் நடத்தி முடிக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்ன போது, முதலில் அவர்கள் என் மகள் கர்ப்பமாக இருப்பதால், வளைகாப்பை நடத்திவிட்டு அதன் பின் பார்த்து கொள்ளலாம் என்று கூறினார்.

லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ஹரிஷ்க்கு பல்லிமுக்கில் ஒரு பட்டறை தொடங்கத் தேவையான தொகையையும் கொடுத்து உதவினேன்.

சமீபத்தில், ஹரீஷ் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் பழகத் துவங்கினார். அவரை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்தே, ராம்ஸி அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

ஆனால், ஹரிஷின் தாய் என் மகளை அடித்து வெளியேற்றினார். அவர்கள் பணத்தால் ஈர்க்கப்பட்டதால், எங்களை உதறிவிட்டு, அந்த குடும்பத்துடன் பழக்கம் வைக்க துவங்கினார்.

எனது மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்து தற்கொலைக்கு தள்ளியவர்கள். அவர்கள் தான், நிச்சயம் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இதை எல்லாம் கண்டு, என் மகள் மனம் உடைந்தாள், அவள் ஏமாற்றப்படுகிறாள் என்று தெரிந்ததும் தற்கொலை செய்து கொண்டாள். அவர்கள் என் மகளை கொன்றார்கள். எனது மகளின் மரணத்திற்கு முழு குடும்பமும் பொறுப்பு.

அவர்களுக்குத் தகுதியான தண்டனையைப் பெறாமல் என்னால் நிம்மதியாக தூங்க முடியாது. ராம்ஸியின் மரணத்திற்கு ஹாரிஸின் மைத்துனர், ஒரு சீரியல் நடிகை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஹரிஷால் கர்ப்பமான ராம்ஸி, கருவை கலைத்துள்ளார். ஏனெனில் ஹரிஷ் நான் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், அதன் பின்னரே குழந்தை எல்லாம் என்று அவரிடம் ஆசை வார்த்தை கூறி கருவை கலைக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்