என் தம்பிய கொன்னுட்டாங்க: ஓராண்டு கழித்து பழிக்கு பழி வாங்கிய அண்ணன்

Report Print Fathima Fathima in இந்தியா
2097Shares

சென்னையில் தம்பியை கொலை செய்தவர்களை ஓராண்டு கழித்து பழிக்கு பழியாக அண்ணன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிசுக்கு தகவல் வந்தது.

சடலத்தை கைப்பற்றிய மாங்காடு பொலிசார் விசாரணையை தொடங்கினர், விசாரணையில் இறந்தவர் ஜெயசூர்யா(வயது 20) என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் பொலிசார் விசாரித்ததில், திருடிய செல்போனை பங்கிடுவதில் ராகேஷ் என்பவருக்கும், வசந்தகுமாருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் வசந்தகுமார் ராகேஷ் என்பவரை கொலை செய்தார், இதனால் ஆத்திரத்தில் இருந்த ராகேஷின் கூட்டாளியான ஜெயசூர்யா வசந்தகுமாரை கொலை செய்தனர்.

இதில் வசந்தகுமாரின் அண்ணனான வினோத், தம்பியை கொலை செய்தவர்களை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தார்.

இதன்படி ஜாமீனில் வெளியே வந்த ஜெயசூர்யாவை வினோத் மற்றும் அவரது கூட்டாளியான லோகேஷ் மது அருந்த அழைத்து சென்று கொலை செய்ததாக தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்