ஒற்றை ஆளாக தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகன்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா
463Shares

தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்ட மகன் ஒற்றை ஆளாக தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து போனார்.

குறித்த பெண்ணின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

எனவே அப்பெண்ணும் கொரோனாவால் இறந்திருக்கலாம் என கருதிய குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை அடக்கம் செய்ய முன்வரவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனே தாயின் சடலத்தை JCBயில் வைத்து எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகவே, பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

உடனடியாக நிஜாமாபாத் கலெக்டர் பிறப்பித்த உத்தரவில், ஒருவரது இறுதிச்சடங்கு முறையாக நடைபெற வேண்டும்.

அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் மாவட்ட சுகாதாரத்துறையினர், குடும்ப உறவினர்கள் அல்லது வருவாய் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டும்.

அவர்களுக்கு தேவையான PPE உடைகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்