திருமண ஆசை காட்டி இளம் பெண்ணிடம் பல முறை உல்லாசமாக இருந்த 40 வயது நபர்! சிக்கியது எப்படி? நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம் பெண்ணிடம் பல முறை நெருக்கமாக இருந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்னாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (40). இவர் ஆண்டிபட்டி பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இவர் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி பகுதியை சேர்ந்த கட்டிட வேலை பார்த்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல முறை உடல் அளவில் நெருக்கமாக இருந்ததாக கூறி, காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இது தொடர்பான தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

அந்த வழக்கின் இன்று இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், கடந்த 2013-ஆம் ஆண்டில் தான் திருமணம் செய்ததை மறைத்து உடன் வேலை செய்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை உடல் அளவில் நெருக்கமாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் உறுதியானது.

இதனால் குற்றவாளியான் பொன்ராஜ் என்பவருக்கு 10 ஆண்டுகள், சிறைத்த தண்டனையும், 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

60 ஆயிரம் ரூபாய் அபராதத்தில் நீதிமன்ற செலவிற்கு 10 ஆயிரமும், பாதிக்கப்ட்ட பெண்ணின் குழந்தையின் படிப்பு பராமரிப்பு செலவிற்கு 50 ஆயிரம் ரூபாயும், அதை செலுத்தத் தவறினால் மேலும், 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேனி மாவட்ட ஆட்சியர் 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் தேனி மாவட்ட மகளிர் நீதி மன்ற நீதிபதி கீதா தீர்ப்பு வழங்கினார். இதணை அடுத்து குற்றவாளி பொன்ராஜை மதுரை மத்திய சிறைக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்