விமானம் மூன்றாக உடைந்திருந்தது... உள்ளே இருந்த பயணிகள் அனைவரும்? பரபரப்பான நிமிடங்களை விளக்கிய நபர்

Report Print Santhan in இந்தியா
1953Shares

கேரளா விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்த சம்பவத்தை அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து உதவிய அபிலேஷ் என்பவர் அந்த பரபரப்பான நிமிடங்களை தற்போது விளக்கியுள்ளார்.

கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று துபாயில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்டு வந்த விமானம் விபத்தில் சிக்கியதால், இந்த விபத்து காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விமானத்தில் விமானி, துணை விமானி என இரண்டு பேர், 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 191 பேர் பயணித்திருந்தனர்.

இந்நிலையில் பயங்கரமான இடி போன்று இருந்ததாக, இந்த விபத்து குறித்து Abhilash என்பவர் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு கூறியுள்ளார்.

அதில், Kondotty விமான நிலையத்திற்கு அருகில் வசித்து வரும் இவர், ஒரு மிகப் பெரிய சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விமானநிலையத்தை பார்க்க முடிந்தது.

இதனால் உடனடியாக நேரத்தை வீணடிக்காமல் தன்னுடைய நண்பர்களுடன் பிக்-அப் டிரக்கை விபத்து நடந்த பகுதிக்கு எடுத்து சென்றேன்.

ஆனால், எங்களுக்கு முன்னரே அங்கு பலர் கூடிவிட்டனர். அங்கிருந்த பொலிசார் மக்களை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விமானத்தின் உள்ளே இருந்து உதவிக்காக மக்கள் கூக்குரலிட்டதை கேட்க முடிந்தது.

விமானம் மூன்றாக உடைந்திருந்தது. நிறைய பேர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின் மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ததை தொடர்ந்து, தானும் தன்னால் முடிந்தவரை விமானத்தின் உள்ளே சிக்கியிருந்தவர்களை வெளியேற்ற முயன்றேன்.

அப்போது கொரோனாவைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் படி கூறப்பட்டாலும், அப்போது அது எல்லாம் எங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

விமானத்தின் நடுப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை எங்களால் காப்பாற்ற முடிந்தது. நசுக்கப்பட்ட நிலையிலும் சிலர் கிடந்தனர். விமானத்தின் முன் பகுதியில் சிக்கியிருந்தவர்களை மீட்பது கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், Abhilash மற்றும் அவரது நண்பர்கள் விபத்தில் சிக்கியிருந்த 7 பேரை மீட்டு உடனடியாக பிக் அப் டிரக்கில் ஏற்றிச் சென்று அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஏனெனில் அந்த நேரத்தில் அப்போது ஆம்புலன்ஸ் வரவில்லை, அதுமட்டுமின்றி அப்பகுதியில் இருந்த மக்கள் பயணிகள் பலரையும் தங்களின் தனிப்பட்ட காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாது ஒரு நாள் என்று Abhilash கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்