கர்ப்பிணி மனைவி... சுக்கலாக நொறுங்கிய விமானத்தின் இரண்டாவது விமானி குறித்து வெளியான தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா
1191Shares

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 19 பேரை பலிகொண்ட விமான விபத்தில் சிக்கி மரணமடைந்த இன்னொரு இளம் விமானி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இதில் துபாய் - கோழிக்கோடு சேவைகளுக்காக மே மாதம் 8 ஆம் திகதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இரண்டாவது விமானியாக பணியாற்றி வருகிறார் 32 வயதேயான அகிலேஷ் குமார்.

இவரும் நேற்றைய தினம் கோழிக்கோடு கரிப்பூர் விமான விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

அகிலேஷ் குமார் உத்தரபிரதேச மாநிலம் மதுரா பகுதியை சேர்ந்தவர். மனைவி மேகா மற்றும் பெற்றோர், சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அகிலேஷ், அதே ஆண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையில் விமானியாக பணிக்கு சேர்ந்துள்ளார்.

தற்போது மனைவி மேகா கர்ப்பமாக உள்ளார். இரண்டாவது விமானியாக பணியாற்றி வந்தாலும், அகிலேஷ் திறமையானவர் என சக விமானிகள் தெரிவிக்கின்றனர்.

விமானம் தொடர்பில் அனைத்து தகவல்களும் அகிலேஷ் விரல் நுனியில் வைத்திருப்பார் என்கிறார் மூத்த விமானி ஒருவர்.

மட்டுமின்றி சிக்கலான தருணங்களில் அவர் மிக சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கியதாகவும் நினைவு கூர்ந்துள்ளார் அவர்.

தற்போது தமது முதல் குழந்தையின் முகத்தை பார்க்காமலே அகிலேஷ் மரணமடைந்துள்ளது, மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார் விமானி மைக்கேல் சால்தனா.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்