விமான விபத்தில் சிக்கியவர்களுக்காக நள்ளிரவில் ஓடி வந்து வரிசையில் நின்ற மக்கள்! நெகிழ்ச்சி புகைப்படங்கள்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு, சிகிச்சையின் போது இரத்தம் தேவைப்படும், விருப்பமுள்ளவர்கள் கொடுத்து உதவும் படி என்று கேட்கப்பட்ட நிலையில், உடனடியாக ஏராளமானோர் வரிசையில் வந்து நின்று இரத்த தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்து தரையிரங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம், ஓடு தளத்தின் இருந்து சற்று விலகி, சுமார் 35 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கி விழுந்ததால், விமான இரண்டாக உடைந்து, விமானத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இரண்டு விமானிகள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமான விபத்தின் போது அங்கு வானிலை மோசமாகவும், கடுமையான மழையும் பெய்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக விமானத்தில் தீ ஏற்பட்டு புகை வெளியேறியதாகவும், ஆனால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதாகவும், இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து காரணமாக காயமடைந்துள்ளவர்கள் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு போன்ற பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை ஆப்த்தாகவும் உள்ளது.

தற்போது காயமடைந்திருக்கும் 123 பேர் கோழிக்கோடில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சிலருக்கு இரத்தம் தேவைப்படுவதால், சமூக ஊடகங்கள் கோழிக்கோடில் ஏற்பட்ட விமான விபத்தில், காயமடைந்தவர்களுக்கு இரத்தம் தேவைப்படுகிறது, கொடுக்க விரும்புவோர் இரத்த தானம் செய்யலாம் என்று அதிகம் பகிரப்பட்டது.

அந்த நள்ளிரவு நேரத்திலும், இரத்த தானம் அளிப்பதற்காக ஏராளமான மக்கள் வரிசையில் வந்து காத்துக் கிடந்தனர். இது தொடர்பான புகைப்படத்தை கேரளா மக்கள் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, இந்தியர் என்பதில் பெறுமிதம் கொள்வோம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்