இரண்டாக உடைந்து நொறுங்கிய விமான விபத்தில் பலியான விமானி இவர் தான்! வெளியான பலி எண்ணிக்கை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 191 பேருடன் தரையிரங்கிய விமான விபத்தில் பலியான விமானியின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

Air India Express நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், துபாயில் இருந்து கேரளாவிற்கு 191 பேருடன் வந்திறங்கிய போது, ஓடுதளத்தில் இருந்து விலகி 35 அடி ஆழமான பள்ளத்தாகில் விழுந்து விபத்தில் சிக்கியதால், விமானம் இரண்டாக உடைந்து நொறுங்கியது.

ஆனால், விமானம் தீப்பிடித்து எரியாத காரணத்தினால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்திற்கு முக்கிய காரணம் விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை.

இந்த விமான விபத்து காரணமாக விமானி உட்பட 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்த விபத்தில் உயிரிழந்த விமானியின் பெயர் Deepak Vasant Sathe எனவும், இவர் முன்னாள் ex-IAF என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்