அதிகாலையில் நான் கண்ட காட்சி! மனைவியை துடி துடிக்க கொலை செயத கணவனின் பகீர் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண் சம்பவத்தில், மகன் மீது பொலிசாருக்கு சந்தேகம் வலுத்த நிலையில், அந்த கொலை சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் நீலாவதி. 42 வயதான இவர் கணவரை பிரிந்து 19 வயது மகனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் கடந்த வியாழக்கிழமை இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் இந்த சம்பவம் குறித்து பொலிசார் அவரின் மகனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

நீலாவதியுடன் அவர் மகன் மட்டுமே வசித்து வந்ததால், பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

அப்போது நீலாவதியின் மகன், சம்பவத்தின் மீது தான் வீட்டில் இல்லை என்றும், தன்னுடைய தந்தை மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் மரக்கடை அதிபராக இருக்கும் நீலாவதியின் கணவர் ராமதாஸை பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே அவளை நான் பிரிந்துவிட்டேன். ஏனெனில் அவள் அப்பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவனுடன் நெருக்கமாக இருந்தார்.

இதனால் நான் அது குறித்து கண்டித்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இதனால் நான் பிரிந்துவிட்டேன். ஆனால் அவள் என் மகனிடம் நான் அவளை சந்தேகப்பட்டு அடித்து உதைப்பதாக கூறி அவனையும் அழைத்து சென்றுவிட்டாள்.

இருப்பினும் மகனிடம் நான் அடிக்கடி பேசி வந்தேன். இது போன்ற சூழ்நிலையில் தான் கடந்த புதன்கிழமை அதிகாலை மரக்கடைக்கு புறப்பட்டு சென்றேன்.

அப்போது, தனது மனைவி தங்கியிருந்த வீட்டின் வழியே சென்ற போது, வீட்டின் படுக்கை அறையில் மின் விளக்கு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.

இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது மனைவி நீலாவதியுடன் தான் ஏற்கனவே பார்த்த இளைஞர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இதனால் உடனடியாக வீட்டின் உள்ளே நுழைந்து இருவரையும் அடித்தேன். அப்போது அந்த இளைஞன் தப்பி ஓடிவிடவே, நீலாவதியை தான் வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.

இந்த கொலை தொடர்பாக பொலிசார் தனது மகனை தேடுவதை அறிந்து, தாமாக முன்வந்து பொலிசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்