பெரியார் ஆற்றில் சடலமாக அடித்து செல்லப்பட்ட காட்டு யானை! உருக வைக்கும் காட்சி

Report Print Basu in இந்தியா

கேரளாவில் பருவமழை தீவிரமடைவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இடைவிடாத பொழியும் மழையால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலம் பாலத்திலிருந்து குறித்து காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயற்கையின் சீற்றத்தால் மனிதர்களை விட காட்டு விலங்குள் பேரழிவுக்கு உள்ளாவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்