சசிகலாவின் வருகை... அவரிடம் சரண்டர் ஆக காத்திருக்கும் எடப்பாடி? இரண்டாக உடையும் அபாயத்தில் அதிமுக!

Report Print Santhan in இந்தியா

சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில், முதலமைச்சரமான எடப்பாடி பழனிச்சாமி, அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதே போன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவும் விடுதலையாகவுள்ளார்.

இதனால் இப்போதே அதிமுகவில் சல்சலப்பு துவங்க ஆரம்பித்துவிட்டது. எங்கு இருந்தால் நமக்கு பாதுகாப்பு என்று அதிமுகவில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை யோசித்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக ஓ.பி.எஸ் சசிகலா அதிமுகவில் இணையவதை விரும்பவில்லை, ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வேறு பிளான் போட்டு வருகிறாராம்.

அதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி தனது மகனின் நண்பனான ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் விவேக் ஜெயராமன் மூலம் சசிகலாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனாலே எந்த ஒரு சூழ்நிலையில் ஓ.பி.எஸ் இடம் அதிகாரம் சென்றுவிடக் கூடாது என்பதில் எடப்பாடி தீவிரமாக இருந்தார்.

பாஜகவால் தான் சசிகலா சிறைக்கு சென்றார் என்பதால் பாஜக மீது உள்ள கோபம் சசிகலாவுக்கு இன்னும் குறையவில்லை என்பதை நன்கு அறிந்த எடப்பாடி, சசிகலா வெளியில் வருவதற்குள் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற முடிவு செய்துள்ளார்.

அதன் முதல் படியாக, மும்மொழிக்கொள்கையை எதிர்த்து பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் எடப்பாடி.

இது குறித்து முழு விபரத்தை அறிந்த டெல்லி பாஜக, அதிமுக அரசின் தவறுகளை துணிந்து விமர்சனம் செய்யுங்கள் என்று தமிழக பாஜகவினருக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் வெளிப்பாடு தான், சமீபகாலமாக அதிமுக மீது கடுமையாக விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால் அதிமுகவில் இருக்கும் ஒபிஎஸ் தரப்பினர் பாஜக பற்றி ஏதும் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளவும், இளவரசி மகள் கிருஷ்ணப்ரியாவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கவும் எடப்பாடி தயாராக இருக்கிறாராம்.

இதன் பின்னணியில் ஒபிஎஸ் கட்சியில் இருந்து ஓரம் கட்டவே, எடப்பாடி இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சசிகலா வெளியில் வருவதற்கு சில நாட்களுக்கு முன், அதிமுக மீண்டும் இரண்டாக உடையும் என்ற கட்சியினர் சிலர் கூறி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்