திருமணமான 2 மாதத்தில் காதல் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் முடிந்து 2 மாதம் கூட ஆகாத நிலையில் கணவர் மனைவி மீது மண்ணெண்ணய் உற்றி கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் பரங்கினி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா. இவரும், நைனார்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த ஜுன் மாதம் 3-ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ராஜேஷ்வரி மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஜீவா, தன்னுடைய மாமியாரின் வீட்டிற்கு போன் செய்து, திடீரென்று ராஜேஸ்வரி தீ குளித்துவிட்டாள், அவளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

பெண்ணின் குடும்பத்தார் மருத்துவமனைக்கு, பொலிசாருக்கும் இந்த சம்பவ்ம குறித்து தெரிவிக்கப்பட்டதால், இது குறித்து விசாரணையை துவங்கினர்.

அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷ்வரி அளித்த வாக்குமூலத்தில், இந்த ஊரடங்கு காலத்தில் கணவன் ஜீவா வேலையில்லாமல் இருந்து வந்தார்.

நகை உட்பட எதுவும் இல்லாமல் அவரை திருமணம் செய்து கொண்டதால், ஜீவாவின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினர்.

இது குறித்து வெளியே சொன்னால் என் அப்பா, அண்ணனை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினர். இதனால் நான் யாரிடமும் இதைப் பற்றி சொல்லாமல் இருந்தேன்.

அதன் பின் கடந்த 3-ஆம் திகதி இருவருக்கும் மீண்டும் சண்டை வந்ததால், ஆத்திரமடைந்த கணவர் ஜீவா திடீரென்று அங்கிருந்த மண்ணெண்ணய் எடுத்து தன் மீது ஊற்றி தீ வைக்க முற்பட்டார். நான் அவரிடம் கெஞ்சினேன், ஆனால் அவரோ என் உடலில் தீயை வைத்துவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதன் பின் பொலிசார் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்