இதனால் தான் திமுக-வில் இருந்து விலகுகிறேன்..! காரணத்தை வெளிப்படையாக கூறிய பிரபல எம்.எல்.ஏ

Report Print Basu in இந்தியா

ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திமுக-வில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 4ம் திகதி திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்படுவதாக கு.க.செல்வம் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக திமுக அறிவித்தது.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவால் காலியான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்கு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் இவ்வாறு செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலயைில், திமுக-வில் இருந்து விலகியதற்கான காரணத்தை எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கூறியுள்ளார்.

திமுகவில் வளர்ச்சி இல்லை என்பதால் விலக முடிவு செய்தேன். திமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக் கொள்ளுங்கள் என கட்சி தலைமையிடம் கூறிவிட்டேன்.

கட்சியில் இருந்து விலகியது மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது காரணமல்ல, திமுக கட்சியில் இருக்கும் குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன்.

வயதாகவிட்டது, உடல்நிலை சரியில்லை, பணம் இல்லை என என்னை கட்சியிலிருந்து ஒதுக்கினார்கள் என கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்