பெண் மந்திரவாதி கொடுத்ததை ஆசையாக சமைத்து சாப்பிட்டு தந்தை, மகனுக்கு நேர்ந்த கதி! பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் சப்பாத்தி சாப்பிட்ட மகன் மற்றும் அவரது மகன் உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் பேதுல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியான மகேந்திர திரிபாதி(56) என்பவரும் அவரின் மகன் அபியன்ராஜ் (33)-ம் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதனால் இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து புதிய திருப்பமாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், கடந்த ஜுன் மாதம் 20-ஆம் திகதி இரவு உணவு சாப்பிடும் போது, நீதிமதி மகேந்திர திரிபாதி மற்றும் அவரது மகன் அபியன்ரா சப்பாத்தி சாப்பிட்டுள்ளனர். நீதிபதியின் மனைவி மட்டும் சப்பாத்தி சாப்பிடாமல் வேறு சாப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சப்பாத்தி சாப்பிட்ட சிறிது நேரத்திலே மகேந்திர திரிபாதி மற்றும் அவரது மகன் அபியன்ரா வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சப்பாத்தி சாப்பிட்ட சிறிது நேரத்திலே உயிரிழந்ததால், பொலிசார் பிரேதபரிசோதனை முடிவுக்காக காத்திருந்துள்ளனர்.

அதன் படி பிரேதபரிசோதனை அறிக்கையில், அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவத்தை பொலிசார் கொலை வழக்காக பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், பெண் மந்திரவாதி ஒருவர் மற்றும் 6 பேரை பொலிசார் கைது செய்தனர். அதில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீதிபதி மகேந்திர திரிபாதி, சந்தியா சிங் என்ற பெண் மந்திரவாதியிடம் தன் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என ஆசி கேட்டுள்ளார்.

தான் செய்யும் பூஜைகளை செய்தால் வீட்டு கஷ்டங்கள் எல்லாம் சரி ஆகி விடும் என சொன்ன அந்த பெண் மந்திரவாதி கடந்த 20-ஆம் திகதி அன்று கோதுமை மாவை கொடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுமாறு கூறியுள்ளார்.

அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல், அன்றைய தினமே அதனை நீதிபதி மற்றும் அவரது மகன் சாப்பிடவே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எதற்காக சப்பாத்தி மாவில் விஷம் வைக்கப்பட்டது? பணத்திற்காக இந்த சம்பவம் நடந்துள்ளதா? என்று தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்