தமிழகத்தில் மாடு மேய்க்க சென்ற பெண் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் கீரைக்காட்டை சேர்ந்தவர் விவசாயி நடேசன். இவரது மனைவி தீபா (25). தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மாடுகளை வனப்பகுதியான எடக்காடு பகுதிக்கு தீபா ஓட்டிச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த நடேசன், பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால், எங்கும் காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை உறவினர்களுடன் சென்று வனப்பகுதியில் தேடினார்.
அப்போது, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் தீபா சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அந்த இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.