கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களாகவே மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கோவில்கள், பேருந்துகள், ரயில்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் / பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது.
உலகின் பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி கோவிலும் மூடபட்டது. இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவானதால் கோவிலுக்கு வரும் காணிக்கை வருமானமும் குறைந்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான உண்டியல் காணிக்கையில் சுமார் ரூ. 385 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வருடத்திற்கு 2 கோடி பக்தர்கள், மாதத்துக்கு 100 கோடி ரூபாய் வரை வருமானம் வருமாம், ஆனால் ஊரடங்கால் பக்தர்கள் வருகை குறைந்ததுடன் வருமானம் குறைந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் கோவிலுக்கு உண்டியல் வருமானமாக ரூ. 15 கோடியே 80 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.