குழந்தை இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சம்பவத்தில் அதிரடி திருப்பம்! கணவன் குறித்து அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் வழக்கில் அதிரடி திருப்பமாக கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ்வரா ராவ் - லாவண்யா.

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக லாவண்யா சில தினங்களுக்கு முன்னர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் ராவ், லாவண்யாவை அடித்து கொடுமைப்படுத்தும் பகீர் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராவை பொலிசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குழந்தை இல்லாத நிலையில் லாவண்யாவை ராவ் அதை கூறியே கொடுமைப்படுத்தி வந்தார்.

இது தான் லாவன்யா உயிரை மாய்த்து கொள்ள முழு காரணம் என கூறப்பட்ட நிலையில் அவர் கணவர் ராவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ராவ் வேறு பெண்ணுடன் இருப்பதை லாவண்யா நேரடியாக பார்த்து அது குறித்து கணவரிடம் கேட்டார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாத ராவ் தொடர்ந்து அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததோடு, மனைவி கண் எதிரிலேயே அப்பெண்ணுடன் வீடியோ அழைப்பில் பேசி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையில் லாவண்யாவின் தந்தை கூறுகையில், ராவ் என் மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடுகிறான் என கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ராவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்