இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்த இளம்வயது நபர்

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றுநோய்க்கு வயதான நபர்களே இறந்து வந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இளம்வயது நபர் உயிரிழந்துள்ளார்.

உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸானது, இதுவரை 308,592 பேரை பாதித்திருப்பதோடு, 13 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பலிகொண்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் உலகநாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்த வைரஸால் தற்போது வரை இந்தியாவில் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41 பேர் வெளிநாட்டவர்கள்.

இதனை கட்டுப்படுத்துவதற்கான முதற்கட்ட முயற்சியாக இந்தியா இன்று நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையானது 4 ஆக இருந்த நிலையில் நேற்று ஒரேநாளில் மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் 36 வயதான இளம் நபர் ஒருவரும் அடங்குவார் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கத்தாரிலிருந்து வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா தாக்குதல் இருப்பது சனிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்ததாவும், தற்போது அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்