ஒரே மருத்துவமனையில் இருந்தும் கடைசிவரை தந்தையை பார்க்காத மகன்: கொரோனாவால் நடந்த சோகம்

Report Print Vijay Amburore in இந்தியா

நோய்வாய்ப்பட்ட தந்தையை பார்ப்பதற்காக கத்தாரிலிருந்து கேரளா வந்த இளைஞர், கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டதால் கடைசிவரை தந்தையின் முகத்தை பார்க்க முடியாத சோகத்திற்கு ஆளாகியுள்ளார்.

கத்தாரில் வேலை செய்துவந்த கேரளாவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த லினோ ஆபெல் என்கிற இளைஞருக்கு கடந்த 7ம் திகதியன்று அவருடைய சகோதரினிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.

நள்ளிரவில் படுக்கையில் இருந்து அவருடைய தந்தை தவறி விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக லினோவின் சகோதரன் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர் வேலை செய்த அலுவலகத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு மார்ச் 8ம் திகதி காலை கேரளா வந்தடைந்தார்.

ஆனால் தரையிறங்கியதும் தொண்டையில் ஏதோ எரிச்சலை உணர்ந்த அவர், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்க தானாக முடிவு செய்துள்ளார்.

அதேமருத்துவமனையில் அவருடைய தந்தையும் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மார்ச் 9 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், லினோவிற்கு அவருடைய தந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. ஒருமுறை கூட தந்தையின் முகத்தை நேரில் பார்க்காத லினோ, இறுதியாக வீடியோ காலில் இறந்த தந்தையின் முகத்தை பார்த்து கண்ணீர் வடித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்