கொரோனா திட்டமிட்டு பரப்பும் உயிரியல் ஆயுதம்.! உண்மையை வெளிக்கொணர வேண்டும்: இந்திய அரசியல்வாதி கொந்தளிப்பு

Report Print Basu in இந்தியா

கொரோனா வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதம் என இந்தியாவின் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளருமான மனீஷ் திவாரி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதம், அது எதிர்பாராதவிதமாக சீனாவின் வுஹான் நகரில் உள்ள வைராலஜி மையத்தில் இருந்து கசிந்ததாக உயிரியல் ஆயுத நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிபுணர்களின் கருத்தை சுட்டிக்காட்டிய இந்திய அரசியல்வாதி மனீஷ் திவாரி சர்வதேச விசாரணை வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதம், அது தீவிரமாக பரவுகிறது அல்லது தீவிரமாக பரப்பப்படுகிறது. இது பயங்கரவாத செயல்பாடாகும்.

ஐ.சி.ஜே அல்லது ஐ.சி.சியின் அனுசரணையில் நடத்தப்படும் சர்வதேச விசாரணை உண்மையை வெளிக்கொணரவும், உயிரியல் ஆயுதங்களை ஒழிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம் என கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்