திருமணமான 30 நாளில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்! நேரில் பார்த்த மாமியார் சொன்ன தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கணவன் குடும்பத்தார் அவரை கொன்றுவிட்டதாக பெண்ணின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் சுந்திகடேனி கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா. இளம்பெண்ணான இவரும் முன்னா என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ஒன்றரை மாதத்துக்கு முன்னர் வீட்டிலிருந்து இருவரும் ஓடிபோனார்கள்.

பின்னர் குடும்பத்தார் சமாதானம் பேசி அழைத்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் வீடு திரும்பிய சுமித்ராவுக்கும், முன்னாவுக்கும் நீதிமன்றத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த சூழலில் நேற்று புதுப்பெண் சுமித்ரா கணவன் வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து சுமித்ரா தந்தை அத்வைத் கூறுகையில், திருமணமான நாளிலிருந்தே ரூ 40000 வரதட்சணை கேட்டு சுமித்ராவை அவர் கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தினார்கள்.

நான் இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டும் தொடர்ந்து உடலளவிலும், மனதளவிலும் சுமித்ராவுக்கு கொடுமை நடந்தது.

இந்த சூழ்நிலையில் தான் தூக்கில் என் மகள் தொங்கியுள்ளார், அவர்கள் தான் சுமித்ராவை கொன்றுவிட்டார்கள் என கதறினார்.

சுமித்ராவின் மாமியார் சீனா கூறுகையில், நாங்கள் வரதட்சணை கேட்டு சுமித்ராவை கொடுமைப்படுத்தவில்லை.

நான் தான் என் மருமகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அவரை காப்பாற்ற முயன்றேன், ஆனால் முடியவில்லை என கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து சுமித்ரா மரணத்துக்காக உண்மை காரணம் குறித்து விசாரித்து வருவதோடு, அவரின் பிரேத பரிசோதனை முடிவுக்காகவும் காத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்