பொலிஸாரை ஏமாற்றிவிட்டு கழிப்பறை ஜன்னல் வழியாக தப்பிய சிறைக்கைதி!

Report Print Vijay Amburore in இந்தியா

நெஞ்சுவலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி, அங்கிருந்த கழிப்பறை ஜன்னல் வழியாக தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான சுப்பிரமணி என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சிறுமி ஒருவரிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நான்கு வாரங்களுக்கு முன், நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் சிறைக்கைதிகளுக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் காலை 4 மணியளவில் கழிப்பறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வெளியில் வராமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சக கைதி ஒருவர், கழிப்பறையை தட்டிப் பார்த்துள்ளார். உள்தாழ்ப்பால் போடப்பட்டிருந்ததால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, வென்டிலேட்டர் உடைந்திருப்பதைக் கவனித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்