டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா! - உறுதி செய்த அமைச்சர்

Report Print Abisha in இந்தியா

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில், 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட 3700 பேர் சிக்கியுள்ளனர்.

முதலில், 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் பின் 60 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்தியர்கள் தங்களை மீட்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டனர். அதில், இந்திய பிரதமர் மோடிக்கும், ஐ.நாவின் குழுவிற்கு அந்த வீடியோ டிவிட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், தமிழகத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர், தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அவர் அதில் “ இது வரை இந்தியர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து இந்திய அரசாங்கம் ஜப்பான் அரசிடம் பேசி இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், இந்தியர்களுக்கு கொரோனா உள்ளதாக என்று சோதித்ததில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

எனவே இந்தியர்கள் மீட்கப்படுவார்களா அல்லது நோயின் தாக்கம் குறைந்த பின் இந்தியாவிற்கு அழைத்துவரப்படுவார்களா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்