ஒரே வீட்டில் அழுகிய நிலையில் 5 சடலங்கள்: விலகாத மர்மம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

டெல்லியின் பஜன்புரா பகுதியில் நேற்று ஒரு குடியிருப்பில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கபட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கபட்டது ஷம்பு சவுதாரி(43) என்பவரின் குடும்பம் என தெரியவந்தது.

அவரது மனைவி சுனிதா(37) மகன்கள் ஷிவம்(17), சச்சின்(14) மற்றும் மகள் கோமல்(12) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டவர்கள்.

இந்த நிலையில், சடலமாக மீட்கபட்ட ஷம்பு எந்த வம்புக்கும் செல்பவர் அல்ல எனவும், மகிழ்ச்சியான குடும்பம் அவருடையது எனவும், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை இருந்தது இல்லை எனவும், இது கண்டிப்பாக கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மட்டுமின்றி ஷம்புவின் மகள் கோமல் கடைசியாக கடந்த 3 ஆம் திகதியே பாடசாலை சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே ஷம்புவின் குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசவே, அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சடலங்களை பரிசோதித்த மருத்துவர்கள், சுமார் நான்கு நாட்களுக்கு முன்னரே மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது பொலிசார், ஷம்பு பயன்படுத்தி வந்த மொபைல் போனை தேடி வருகின்றனர். மேலும், ஷம்புவின் குடியிருப்பு கொள்ளையடிக்கப்படவில்லை எனவும், இந்த விவகாரத்தை கொலை வழக்காகவே விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்