நாம் தமிழர் சீமான் மீது வழக்குப்பதிவு!

Report Print Basu in இந்தியா

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு கிண்டியில் நடைபெற்ற காமராஜர் நினைவுநாள் விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்வுக்கு பிறகு காமராஜர் நினைவு மண்டபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார் சீமான்.

அதில், அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்