அய்யய்யோ இங்கேயும் வந்துட்டாங்க! சீனா இளைஞரை பார்த்து அலறி அடித்து ஓடிய மக்கள்: எங்கு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சினா இளைஞரை பார்த்தவுடன், மக்கள் தலை தெறிக்க ஓடியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் உலகமே பீதியில் உள்ளது. தற்போது வரை இந்த தாக்குதலுக்கு 722 பேர் பலியாகியுள்ளதாகவும், 34,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த செங்ஸு என்ற இளைஞர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கிறார். கடந்த 28-ஆம் திகதி இந்தியாவின் முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்த்த இவர், அதன் பின் கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டின், இராமேஸ்வரம் பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கிருக்கும் தனியார் லாட்ஜ் ஒன்றி அறைக்காக பதிவு செய்த போது, அவர் சீனாக்காரர் என்பதை உணர்ந்த அந்த லாட்ஜ் மேலாளர் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அடுத்த சில மணி நேரத்திலேயே, வட்டாட்சியர், நகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை மருத்துவர்கள் லாட்ஜுக்கு விரைந்தனர். இந்த செய்தியை அறிந்த அதே லாட்ஜில் தங்கியிருந்த மற்றவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடி ஆரம்பித்துவிட்டனர்.

அவருக்கு கொரானா வைரஸ் பரிசோதனை ஏற்கனவே எடுக்கப்பட்டதா? இல்லையா? என்றுகூட சரியாக தெரியாமல் பரபபாக்கிவிட்டனர்.

அந்த இளைஞர், தனக்கு எந்த வைரஸும் இல்லை, கொல்கத்தாவிலேயே கொரோனா பரிசோதனை எடுத்த பின்னரே, ஒதமிழ்நாட்டுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் என்னை அனுமதித்ததாக கூறியுள்ளார்.

இருப்பினும், சிலர் தங்களின் பிள்ளைகள் சீனாவில் இருப்பதாகவும், அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப சீன அரசு அனுமதி மறுத்துவருகிறது.

அப்படி இருக்கும்போது, சீனாவை சேர்ந்த ஒருவர் எப்படி தமிழ்நாடு முழுவதும் சுதந்திரமாக சுற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் நம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பொலிசார் அந்த சீன இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அதிகாரிகள் தனி வார்டுக்கு கொண்டு சென்று கொரோனா சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்